Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுக்கு உணவு தர முடியாது வெளிய போங்க! தீண்டாமையை கடைபிடித்த ஊழியர்கள்? (அதிர்ச்சி வீடியோ உள்ளே)

உங்களுக்கு உணவு தர முடியாது வெளிய போங்க! தீண்டாமையை கடைபிடித்த ஊழியர்கள்? (அதிர்ச்சி வீடியோ உள்ளே)

கர்நாடகாவில் உணவுப் பொருள் வாங்கச் சென்ற நாகா இனத்தை சேர்ந்தவரை கடையை விட்டு வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக் இருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. மளிகை கடை, காய்கறி மற்றும் மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்க அரசு அனுமதி கூறியது. மேலும் எந்த பொருட்களை வாங்கச் சென்றாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் உணவு பொருட்களை வாங்கச் சென்ற நாகா மக்களை கடை ஊழியர்கள் வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் மைசூரில் உள்ள கடையில் தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நாகா இன மக்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது கடையின் வெளியே நின்றிருந்து கடையின் ஊழியர் உள்ளே செல்ல நினைத்த நாகா இனத்தைச் சேர்ந்த நபரை வெளியேறுமாறு கூறுகிறார். இதனையடுத்து நாங்களும் நீங்களும் மனிதர்கள்தானே ஏன் எங்களை தடுக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு கடை ஊழியர்கள் சரியான பதில் அளிக்காமல் நாட் வீடியோ, நாட் வீடியோ என்று வீடியோ எடுக்க வேண்டாம் என்று கையால் மறைத்து தடுக்கிறார்.

கடை ஊழியருக்கும் உணவு வாங்கச் சென்ற நபருக்கும் நடந்ததை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதில் கடைக்கு உள்ளே செல்ல வேண்டாம் வெளியேறுமாறு ஊழியர் தெரிவிக்கிறார். வீடியோ எடுப்பதைப் பார்த்தவுடன் அதை நிறுத்துமாறு கேமிராவை மறைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடைக்கு வந்த மற்ற நபர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து வெளியே நிற்பது வீடியோ காட்சியில் பதிவாகி உள்ளது.

Exit mobile version