காவேரி ஒழுங்காற்று குழு மூலம் இன்று நூறாவது கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிற்கு முறைப்படி கிடைக்க வேண்டிய நீர் குறித்து விவாதம் செய்யப்பட்டது. முன்னதாகவே கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
மேற்கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவானது ஒரு டிஎம்சி நீர் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கூறிய நிலையில் அதற்கு முற்றிலும் கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்தது. வேண்டுமானால் 8 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட உள்ளதாக கூறினர். இதனால் தமிழகத்தில் ஆளும் கட்சி முதல் எதிர்கட்சி வரை பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து இன்று காவேரி ஒழுங்காற்று குழு 100வது கூட்டம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கட்டாயம் கர்நாடகா அரசு தர வேண்டும் என கூறியுள்ளனர். உரிய பங்கை வழங்க மறுக்கக்கூடாது என காவேரி ஒழுங்காற்றுக் குழு கர்நாடகாவிடம் கூறியுள்ளது.