Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!

கற்பூரவள்ளி பேஸ் பேக்! நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்!

 

பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முகப்பரு கரும்புள்ளி கருவளையம் போன்றவைகளை நீக்க பெண்கள் எண்ணற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நாம் முகத்தில் ஏற்படும் முகப்பரு கரும்புள்ளி போன்றவர்களை நீக்க எளிய வழிமுறையை காணலாம். கற்பூரவள்ளி இலையை சளி, காய்ச்சல், தும்மல் போன்றவைகளுக்கு தான் பயன்படுத்துவோம்.

இதனை பயன்படுத்துவதன் மூலம் நம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முதலில் இரண்டு அல்லது ஐந்து கற்பூரம் வள்ளியை எடுத்துக்கொள்ள வேண்டும்.அதனை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ளதில் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிர் சேர்ப்பதன் மூலம் முகத்தில் பளபளப்பு ஏற்படும். மேலும் சரும மினு மினுபிற்க்கு பயன்படுகிறது.

 

மேலும் அதில் ஒரு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதே ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ள வேண்டும். கற்பூரவள்ளி இலை,தயிர் ,கடலை மாவு, எலுமிச்சை சாறு ஆகிய நான்கு பொருட்களையும் நன்கு கலந்து கொள்ள. முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கழித்து தேய்த்து மசாஜ் செய்த அதனை நீக்க வேண்டும்.

Exit mobile version