Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குருட்டு நம்பிக்கையில் இருக்காதீங்க! கார்த்தி சிதம்பரம் பொளேர்!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட வேண்டும் என்று மத்திய அரசு கங்கணம் கட்டிக் கொண்டே இருக்கின்றது ஆகவேதான் பிஎஸ்என்எல் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக முடக்கப்பட்டு வருகின்றது.

அந்த கம்பெனியின் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கு. மத்திய அரசு எந்தவிதத்திலும் ஒத்துழைக்காமல் இருக்கின்றது. அங்கே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக ஓய்வு அளித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள் .

பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கின்றது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அளிக்காமல் போய்விட்டது.

அந்த நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கி இருக்கின்றது பீகார் மாநில தேர்தலில் நிதீஷ்குமார் அவர்கள் முதலமைச்சராக வர இயலாது.

2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுகவுடன் தான் கூட்டணி அமைக்கும் எனவே இத்தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெற்று ஆட்சியில் அமரும்.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைக்காமல் இருப்பது விசித்திரமான ஒன்றாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தினாலேயே எய்ம்ஸ் மருத்துவமனை குழுவில் எம்பிக்கள் சேர்க்கப்படவில்லை மனு நீதி நூல் பற்றி பாரதிய ஜனதா தான் தெளிவாகக் கூற வேண்டும்.

திருமாவளவன் பேசியதற்கு கற்பனையாக இணைத்து பல கருத்துக்கள் உலா வருகின்றது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை திமுகவிடம் கேட்க இருக்கின்றோம். இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடந்து வருகின்றது.

பாரதிய ஜனதா கட்சி ஒரு கூட்டணியில் சேர்ந்தால் அது மைனஸ் எனவும் காங்கிரஸ் ஒரு கூட்டணியில் சேர்ந்தால் அது பிளஸ் எனவும் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் வடிவேலு பிரச்சாரத்திற்கு வரும்போது கூட்டம் சேரும் அது வாக்காக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை இதுவே வரலாறு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டியை போல குஷ்பு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு கட்சிக்கு சென்று கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார். திமுக கூட்டணிக்கு புதிதாக ஒரு சில கட்சிகள் வரவிருக்கின்றன பாஜக வெற்றி பற்றிய குருட்டு சிந்தனையில் இருக்கின்றது.

காங்கிரஸ் விஞ்ஞான சிந்தனையில் போய்க் கொண்டே இருக்கின்றது இப்படி இருந்தால் மட்டுமே வெற்றி பெற இயலும் என்ற நிலை இருக்கின்றது காங்கிரஸ் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு முறைப்படி பெண்களுக்கு தேர்தலில் தொகுதிகள் வழங்கப்படும் காங்கிரஸ் கட்சியில் சிறுபான்மையினருக்கு அதிகமான இடம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்

Exit mobile version