Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கார்த்தி – ராஜுமுருகன் இணையும் புதிய படம்… தொடங்குவதற்கு முன்பே கொக்கி போட்டு தூக்கிய நெட்பிளிக்ஸ்!

கார்த்தி – ராஜுமுருகன் இணையும் புதிய படம்… தொடங்குவதற்கு முன்பே கொக்கி போட்டு தூக்கிய நெட்பிளிக்ஸ்!

குக்கூ மற்றும் ஜோக்கர் ஆகிய படங்களின் இயக்குனர் ராஜு முருகன் அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து குறுகிய கால இடைவெளியில் ரிலீஸ் ஆக உள்ளன. ஒரே ஆண்டில் இதுபோல மூன்று படங்கள் கார்த்திக்கு ரிலீஸ் ஆனதே இல்லை. அதிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கும் படமாக அமைந்துள்ளது.

கார்த்தியின் 25 ஆவது படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியகி வருகின்றனர்.  ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என சொல்லப்பட்டது. இதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இப்போது படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு முன்னணி ஒளிப்பதிவாளரான ரவி வர்மன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்புக் கூட இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படத்தின் ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமம் சுமார் 24 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸால் கைப்பற்றப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை கார்த்தியின் படத்துக்கு இவ்வளவு பெரிய தொகை விலை போனதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version