கார்த்தியின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங்…. விருமன் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் விவரம்!

0
191

கார்த்தியின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங்…. விருமன் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் விவரம்!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அரதப் பழசான கதையை எடுத்து வைத்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் படத்துக்கு  முதல்நாளில் நல்ல கூட்டம் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பல பிரபலங்களும் படத்தைப் பார்த்து பாராட்டி வந்தாலும், ரசிகர்களை பெரிய அளவில் படம் கவரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முதல் நாளில் விருமன் திரைப்படம் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் படத்தின் வசூல் குறையவில்லை. இரண்டு நாட்களிலும் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் முதல் மூன்று நாட்களில் வசூல் 30 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.

கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய ஓப்பனிங் வசூலைக் கொடுத்த படமாக விருமன் அமைந்துள்ளது. கார்த்தியின் ஆல்டைம் பெஸ்ட் படமான கைதி திரைப்படத்தின் வசூலை விருமன் முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் நெகட்டிவ் விமர்சனம் காரணமாக ரிப்பீட் ஆடியன்ஸ் வருவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.