Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கார்த்தி சிதம்பரம் தெரிவித்த அந்த கருத்தால்! வெடித்தது சர்ச்சை கடும் ஆத்திரத்தில் பாஜகவினர்!

தமிழ்நாட்டில் அதிமுகவின் போக்கு யாத்திரை மற்றும் மருத்துவ படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு போன்ற வேலைகளை தமிழக அரசு செய்துவருகின்றது.

அது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக பார்ப்பவர்களுக்கு தெரிகின்றது.

ஆனாலும் இதெல்லாம் அரசியல் திட்டம் அதாவது சிறுபான்மையினரை ஈர்க்கும் விதமாக இப்படி ஒரு நாடகம் நடந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றார்கள்.

வேறு கட்சியை சார்ந்தவர்கள் சமீபத்தில் அமைச்சர்கள் அத்து மீறி பேசினால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்றெல்லாம் எச் ராஜா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதுபோன்ற நிலையில், சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்ததாவது, பாஜகவுடன் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று நினைத்தாலும், பாஜக அதிமுகவை விடப்போவதில்லை.

தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகவிற்கும் இருக்கும் முருகனுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

தமிழக பாஜக தலைவர் முருகனுக்கு உண்மையான கடவுள் முருகனைப் பற்றிய வரலாறு தெரியுமா? வேல் யாத்திரை என்பது முழுவதும் அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படுகின்ற ஒரு ஊர்வலம்.

இந்த யாத்திரையில், சட்டம் பிரச்சனை ஏற்படுமானால், அதனை பாதுகாக்கும் கடமை தமிழக அரசுக்கு இருக்கின்றது.

திரு. கமல்ஹாசன் அவர்கள் மூன்றாம் அணியையும் அமைக்கலாம். மூன்றாம் பிறையையும் உருவாக்கலாம். அது அவருடைய உரிமை என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version