கார்த்திகை தீபம்: எண்ணெய் வேண்டாம் தண்ணீர் இருந்தால் விளக்கு நின்று எரியும்!!

0
102
Karthigai Deepam: No oil needed, if there is water, the lamp will burn!!

aதமிழகத்தில் கார்த்திகை தீபம் நாளை அதாவது டிசம்பர் 13 அன்று சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த கார்த்திகை தீப நாளில் அனைவரது வீடும் விளக்கு ஒளியால் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.வீட்டில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாலை நேரத்தில் தீபம் போடுவதை இந்து மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட உடன் நம் வீட்டில் தீபம் வைக்கின்றோம்.இவ்வாறு நீங்கள் வைக்க கூடிய தீபம் நீண்ட நேரம் அணையாமல் எரிய கீழ்கண்ட டிப்ஸை பின்பற்றுங்கள்.

பொதுவாக வீடுகளில் தீபம் ஏற்ற மண் விளக்கு பயன்படுத்துவது வழக்கம்.,இதனால் விளக்கில் ஊற்றும் எண்ணெய் சீக்கிரம் உறிஞ்சப்பட்டுவிடுவதால் தீபம் சில நிமிடங்களில் அணைந்துவிடுகிறது.ஆனால் தற்பொழுது சொல்லப்பட உள்ள டிப்ஸை பாலோ செய்தால் நாள் முழுவதும் விளக்கு அணையாமல் எரியும்.

இதற்கு தேவைப்படும் பொருட்கள் சிறிய கண்ணாடி கிண்ணம்,பஞ்சு திரி,மஞ்சள் தூள்,விளக்கெண்ணெய்,ரோஜா இதழ் மற்றும் தண்ணீர்.

முதலில் கண்ணாடி கிண்ணம் ஒன்றை எடுத்து அதில் 3/4 பங்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு பாட்டில் மூடி எடுத்து அதன் நடுவில் துளையிட்டு பஞ்சு திரி ஒன்றை நுழைக்கவும்.பிறகு இதை கண்ணாடி கிண்ணத்தில் தலைகீழாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் [பிறகு கண்ணாடி கிண்ணத்தில் ரோஜா இதழ்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு திரியை பற்ற வைத்தால் நீண்ட நேரத்திற்கு அணையாமல் எரியும்.இந்த விளக்கிற்கு மிகவும் குறைவான அளவே எண்ணெய் தேவைப்படும்.தங்கள் வீட்டை அலங்கரிக்க எத்தனை விளக்கு தேவைப்படுகிறதோ செய்து தீபம் ஏற்றுங்கள்.

மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றுபவர்கள் அதை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்த பிறகு பயன்படுத்த வேண்டும்.கார்த்திகை தீபத்தில் புதிய மண்விளக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.உடைந்த,விரிசல் உள்ள மண் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.அதேபோல் எண்ணெய் படிந்த பழைய விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.