Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழருவி மணியன் மிகவும் ராசியானவர்! அவர் யாரை ஆதரித்தாலும் அது விளங்காது! எம்.பி கார்த்தி சிதம்பரம்

திண்டுக்கல்லில் பயணியர் விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம்,தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, ஒரு விபத்தில் உருவான அரசாங்கம். இந்த ஆட்சிக்கு ஆறு மாதத்தில் நல்ல தீர்வு கிடைக்கும்.

இந்த கொரோனா காலத்தில் ஒவ்வொரு தனிநபருக்கும் ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால் அதிமுக அரசு வெறும் 1000 ரூபாயைக் கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளது.

திமுக காங்கிரஸ் கூட்டணி சட்டசபைத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். அடுத்த வருடம் தேர்தல் கண்டிப்பாக நடைபெறும்.அதில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் ஆட்சியில் அமர்வார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகளிடம் தடுக்க யுக்திகள் எதுவும் இல்லை.ஊரடங்கினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார் அதன் பின்,

மின் கட்டணம் குறித்த கேள்விக்கு,

முன்பெல்லாம் மின்சாரம் என்றால் தான் பயமாக இருக்கும். ஆனால் தற்பொழுது மின்சாரக் கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்குது. தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாலும் மத்தியில் உள்ள ஆளும் பாஜக மட்டும் அதனை விரும்பவில்லை.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடர்ந்து தர வேண்டும் என்று கூறினார்.

கோவிலுக்கு பதிலாக பள்ளிகள் கட்டலாம் பற்றிய கேள்விக்கு,

நான் கடவுள் நம்பிக்கை உடையவன் தான் ஆனால் இந்தியாவிற்கு புதிதாக கோவில்கள் தேவையில்லை, இந்தியாவிற்கு மருத்துவமனை, கல்லூரி, பள்ளிகள் தான் தேவை என்று கூறினார்.

சுற்றுச்சூழல் அவசர சட்டம் பற்றிய கேள்விக்கு,

பாராளுமன்றம் நடைபெறாத சமயத்தில் சுற்றுச்சூழல் சம்பந்தமான அவசர சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மக்களை கலந்து ஆலோசிக்காமல் நிறைவேற்றப்பட்டது. இது சுற்றுச்சூழலுக்கு விரோதமானது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்று கூறினார்.

அதிமுக அமமுக கூட்டணி பற்றிய கேள்விக்கு,

அதிமுகவிற்கு என்று ஒரு ஒற்றைத் தலைமை இல்லை. சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அமமுக, அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

ரஜினியால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்ற தமிழருவி மணியன் கருத்துக்கு உங்கள் கருத்து ?

தமிழருவி மணியன் மிகவும் ராசியானவர்! அவர் யாரை ஆதரித்தாலும் அது விளங்காது!என்றார்.இவ்வாறாக செய்தியாளர் சந்திப்பில் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறினார்.

Exit mobile version