Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“சந்திரபாபுவின் பயோபிக் எடுத்து அவரை நடிக்க வைக்க ஆசை…” இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

“சந்திரபாபுவின் பயோபிக் எடுத்து அவரை நடிக்க வைக்க ஆசை…” இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தற்போது ஜிகர்தண்டா 2 படத்தை இயக்குவதற்கான வேலைகளில் பிஸியாக உள்ளார்.

பீட்சா படத்தின் மூலம் தன்னை இயக்குநராக நிலை நிறுத்திக் கொண்ட கார்த்திக் சுப்புராஜ் அதன் பிறகு ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’ என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கினார். சமீபத்தில் விக்ரமின் 60வது படமான மகான் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. இதில் விக்ரமுடன் அவரது மகனான துருவ் விக்ரமும் நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் தன்னுடைய பழைய ஹிட் படமான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் எஸ் ஜே சூர்யா வில்லனாகவும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் அளித்த நேர்காணல் ஒன்றில் பழம்பெரும் மறைந்த நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்தை இயக்க ஆர்வமாக உள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அவர் “அப்படி அந்த படம் உருவானால் அதில் நடிகர் தனுஷை சந்திரபாபுவாக நடிக்க வைக்க ஆசை உள்ளது” என்றும் கூறியுள்ளார். நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட சந்திரபாபு தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளில் சிக்கில் மிக இளம் வயதிலேயே மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைவுக்குப் பிறகு அவரது புகழ் பல மடங்கு அதிகமாகியுள்ளது.

Exit mobile version