Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாய்ப்பு கிடைக்காததால் ஜீவா பட கதாநாயகி எடுத்த அதிர்ச்சி முடிவு

Jiiva-News4 Tamil Latest Tamil Cinema News

Jiiva-News4 Tamil Latest Tamil Cinema News

வாய்ப்பு கிடைக்காததால் ஜீவா பட கதாநாயகி எடுத்த அதிர்ச்சி முடிவு

தமிழ் திரையுலகில் 1980 களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக இருந்தவர்தான் நடிகை  ராதா. தற்போது அவரது மகள் கார்த்திகா “கோ” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடிகர் ஜீவாவுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு அவர்  அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒருசில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்

இந்நிலையில் நடிகை கார்த்திகா இறுதியாக வா டீல் என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இந்த திரைப்படமானது சில பிரச்சனைகள் காரணமாக வெளியிடப்படாமல் உள்ளது.

பட வாய்ப்பு இல்லை.... சினிமாவை விட்டு விலகும் நடிகை கார்த்திகா

இந்த படத்திற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் ஏதும் அமையவில்லை இதன் காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் சில  தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தயாராக இருந்தும் அவருக்கு அதில் கூட நடிக்க வாய்ப்பு எதுவும் வரவில்லை.

இவ்வாறு தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் விரக்தியில் சினிமாவை விட்டு விலகி விடலாம் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து அவருடைய தந்தை நடத்தும் ஹோட்டல் தொழிலை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரைப் போலவே அவருடைய தங்கை துளசியும் 2013ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

நடிகை கார்த்திகாவின் தங்கை துளசியின் நடிப்பில் இறுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு “யான்” என்ற திரைப்படம் வெளிவந்தது. அதன்பிறகு அவருக்கும் சொல்லிக் கொள்ளும் வகையில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.த

Exit mobile version