சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த விரதங்களில் ஒன்று கார்த்திகை சோமவார விரதம்.குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்க,நோய்கள் தீர,வேண்டிய காரியங்கள் நிறைவேற கார்த்திகை சோமவர நாளில் விரதம் இருக்க வேண்டும்.
கார்த்திகையில் வரும் ஐந்து சோமவர நாளில் விரதம் இருந்தால் தங்கள் ஆயுள் அதிகரிக்கும்.இந்நாளில் விரதம் இருப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.சிவ பக்தர்கள்,சிவனை வழிபடுபவர்கள் 8 விதமான விரதங்களை இருப்பார்கள்.அதில் முக்கியான ஒன்று தான் இந்த கார்த்திகை சோமவார விரதம்.
நேற்று 18 ஆம் தேதி கார்த்திகை சோமவார முதல் நாள் தொடங்கியது.அடுத்து நவம்பர் 25,டிசம்பர் 02,டிசம்பர் 04 மற்றும் டிசம்பர் 09 மற்றும் டிசம்பர் 16 ஆகிய தேதிகளில் இந்த சோமவாராம் வர இருக்கிறது.
இந்த சோமவார நாளில் தேவர்கள்,முனிவர்கள்,தெய்வங்கள் கூட விரதம் இருந்து சிவ பெருமானிடம் வரங்களை பெற்றுள்ளனர் என்று புராணங்களின் கூறப்பட்டுள்ளது,இந்நாளில் சூரியன் உதயமான பிறகும் சூரியன் அசுத்தமாகும் வரை எதையும் உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும்.
இந்நாளில் சிவ பக்தர்கள் சிவன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி சோமவரம் இருப்பார்கள்.ஆனால் சிலர் இந்த விரதத்தை கடைபிடிக்க முடியாத நிலையில் இருப்பர்.உடல் நலக் கோளாறு போன்ற பிற காரணங்களால் சோமவார விரதம் இருக்க முடியாதவர்கள் அன்றைய நாளில் சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளலாம்.சிவ அபிஷேகத்திற்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.கோயிலுக்கு வருபவர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.விரதம் இருக்க முடியாதவர்கள் இப்படி செய்து சிவனின் அருளை பெறலாம்.