Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கார்த்தியின் அதிரடி முடிவு..! அதிர்ச்சியில் உதவி இயக்குனர்கள்

Karthiks Sudden Decision-News4 Tamil Online Tamil News Cinema News

Karthiks Sudden Decision-News4 Tamil Online Tamil News Cinema News

கார்த்தியின் அதிரடி முடிவு..! அதிர்ச்சியில் உதவி இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனிப்பாதை வகுத்து அதில் பயணித்துவருபவர் கார்த்தி. அவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கைதி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இவர் தற்போது, அடுத்த சில வருடங்களுக்கு எந்த அறிமுக இயக்குநரின் கதையிலும் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்திருக்கிறாராம். கார்த்தியின் முந்தைய படமான ‘தேவ்’, ரஜத் ரவிச்சங்கர் என்ற அறிமுக இயக்குநரால் உருவானது. அந்தப் படத்தின் படுதோல்வி காரணமாகவே, கார்த்தி இந்த முடிவை எட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே 2012-ல் வெளியான ‘சகுனி’ படத்தின் தோல்விக்குப் பிறகு சில வருடங்களாக உதவி இயக்குநர்களிடம் கதைக் கேட்பதைத் தவிர்த்துவந்த கார்த்தி, சமீபத்தில்தான் ‘தேவ்’ படத்தின்மூலம் மீண்டும் ஒரு உதவி இயக்குநருக்கு வாய்ப்பளித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் இந்த முடிவை அவர் எடுத்திருப்பது கோலிவுட் உதவி இயக்குநர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கெனவே கார்த்திக்காக உதவி இயக்குநர்களிடம் கதை கேட்டு ஒப்பந்தம் செய்திருந்த தயாரிப்பாளர்களும் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறார்களாம்.

ஏற்கெனவே கார்த்தியின் சகோதரர் சூர்யா, கடந்த 15 வருடங்களாகவே புதுமுக இயக்குநர்களின் கதைகளில் நடிப்பதில்லை என்பதை ஒரு அறிவிக்கப்படாத கொள்கையாகவே பின்பற்றிவருகிறார் என்பது ஒரு கூடுதல் தகவல்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Exit mobile version