பெயர் மாற்றத்தால் ஏற்பட்ட கலகம் முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

0
141

புதுச்சேரி சட்டசபையில் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாக, ஒரு சாலைக்கு டாக்டர் கலைஞர் சாலை என்ற பெயரை நீக்கி இருக்கிறார்கள் .அதன் காரணமாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் வெடித்திருக்கிறது . புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி ஒரு நாள் சுற்றுப்பயணமாக காரைக்காலுக்கு வந்து சேர்ந்தார். அங்கு பல அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதில் காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை என்று திறப்பு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற அவர் அந்த சாலையை தொடங்கி வைத்தார்.

அந்த சமயத்தில் காரைக்கால் மாவட்ட திமுகவின் அமைப்பாளர் நாசிம் தலைமையிலே அங்கே ஒன்று திரண்டு வந்த அந்தக் கட்சியினர் புதுவையில் அமைச்சரவை எடுத்த முடிவு படி இந்த சாலைக்கு டாக்டர் கலைஞர் சாலை என்று பெயர் சூட்டப்படவில்லை என மேடையில் இருந்த முதல் அமைச்சர் நாராயணசாமியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்கிறார்கள். இதன் காரணமாக அங்கு பதற்றமும் பரபரப்பும் உண்டானது.

அதோடு திறப்புவிழா அழைப்பிதழ் மீண்டும் கூட டாக்டர் கலைஞர் புறவழிச்சாலை என்று பதிவு செய்யவில்லை மேற்கு புறவழிச்சாலை என்றுதான் பதிவு செய்து இருக்கிறீர்கள் என்று தெரிவித்து அந்த கட்சியினர் ,காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறதா அல்லது இல்லையா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதன் காரணமாக நாராயணசாமி மிகுந்த வருத்தத்திற்கு ஆளானார்.

உடனடியாக காரைக்கால் மாவட்ட பொறுப்பு ஆட்சியரை கூப்பிட்டு அந்த சாலையின் பெயரை டாக்டர் கலைஞர் புறவழிச்சாலை என்று எழுதி விடுங்கள் என முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து திமுகவினர் அங்கிருந்து சென்று விட்டனர் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலிடம் புகார் கூறியிருக்கிறார்கள்.

திடீரென்று நடைபெற்ற இந்த சம்பவம் காரணமாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் வெடித்து இருக்கிறது. அதோடு மன வருத்தம் ஏற்பட்டு இருக்கிறது கூட்டணியில் பிளவு இருப்பதை இந்த சம்பவம் வெளிப்படையாகவே காட்டி விட்டது என்று அரசியல் விமர்சகர்கள், மற்றும் நடுநிலையாளர்கள் போன்றோர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.