கரூரில் பரபரப்பு! அதிமுக மாவட்ட அலுவலகத்தில் திடீரென்று புகுந்த பறக்கும் படை அதிரடி சோதனை!

0
116

கரூர் பழனியப்பா தெருவிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவை வைத்திருப்பதாக கிடைத்த தகவலினடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தார்கள்.

சோதனையில் எந்த பொருளும் கிடைக்காததால் அதிகாரிகள் சோதனை செய்ததில் எந்தவிதமான பொருளோ அல்லது பணம் எதுவும் கிடைக்கவில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பி சென்றிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் திடீரென்று அதிமுகவின் அலுவலகத்திற்கு சென்று சோதனை செய்தார். அப்போது காவல்துறையினருக்கும், அதிமுகவினருக்குமிடையே வாக்குவாதம் உண்டானது.

அதிமுகவினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி காவல்துறையிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் இதன் காரணமாக, பரபரப்பு உண்டானது. காவல்துறையினர் எல்லோரும் வெளியேறினார்கள்.

இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிமுகவின் மாவட்ட அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாற்றும்போது அவர் தெரிவித்ததாவது,

பறக்கும் படையைச் சேர்ந்த வட்டாட்சியர் கட்சி அலுவலகத்தில் சோதனை செய்தார். அதன் முடிவில் பரிசுப் பொருளும் மற்றும் பணமுமில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார்கள் என தெரிவித்தார்.

அதன்பிறகு கரூர் நகர காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் வருகைதந்து மீண்டும் அலுவலகத்தில் சோதனை செய்து எங்களை மிரட்டினார்கள். கரூர் மாநகராட்சிக்கு 2 லட்சம் ஹாட் பாக்ஸ் மற்றும் 1000 ரூபாய் ஆளும் கட்சி மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை எந்த தேர்தல் பறக்கும் படையும் பிடிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

கரூர் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுகவின் காரணமாக, பண மழை கொட்டி வருகிறது. அதனை காவல்துறையினர், தேர்தல் பறக்கும்படை, உள்ளிட்டோர் பறிமுதல் செய்யவில்லை.

கோயமுத்தூரில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள், நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அதேபோல கரூர் மாவட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதிமுகவின் வேட்பாளர்களை திமுகவினர் வீடுபுகுந்து மிரட்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் எம்.ஆர். விஜயபாஸ்கர்.