Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கான பாடகி இசைவாணி மீது இன்று கரூர் இந்து முன்னணி புகார் கொடுக்கப்பட்டது!!

Karur Hindu Front filed a complaint against singer Isaivani today!!

Karur Hindu Front filed a complaint against singer Isaivani today!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் அடைந்த கானா பாடகி இசைவாணி ஆவர். அவர்  “ஐ ஆம் சாரி ஐயப்பா” என்ற ஒரு பாடலை பாடி இருக்கும் நிலையில் அது ஐயப்ப பக்தர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் இருக்கிறது என்று பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான கானா பாடகி இசைவாணி இயக்குனர் பா.ரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்கிற பேண்டில் இணைந்து பல்வேறு சுயதின பாடல்களை பாடி பிரபலமடைந்து இருக்கிறார்.

இவருடைய கானா பாடல்கள் பெண்கள் அடிமை, பெரியார் தத்துவம், சுய கௌரவம் என்று பல வகைகளில் இருக்கிறது. ஆனால் அவர் பாடிய “ஐ ஆம் சாரி ஐயப்பா” ஐயப்பன் இழிவுப்படுத்தி பாடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் அவர மேல் இந்து அமைப்பினர்  வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் எல்லா வயதினரும் கலந்து கொண்டாலும் பெண்கள் இந்த சன்னதிக்கு செல்வதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆனால் பெண்கள் இளம் வயதில் வந்தால் என்ன தப்பு என்று கேட்கும் வகையில் பாடல் வரிகள் இருக்கிறது. அதாவது “ஐ ஆம் சாரி ஐயப்பா… நான் உள்ளே வந்தால் என்னப்பா.. நான் தாடிக்காரன் பேபி… இப்ப காலம் மாறிப்போச்சு… இனி தள்ளி வச்சா தீட்டா.. நான் முன்னேறுவேன் மாஷா..” என்று பாடலை பாடி இருக்கிறார்.

அதன்படி கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் இன்று கரூர் நகர காவல் நிலையத்தில் மாநகர தலைவர் த.கணேஷ் தலைமையில் இந்து முன்னணியினர் புகார் மனு அளித்தனர். மேலும் அந்த மனுவில் கூறப்பட்டது  ‘இந்துக்களின் கலியுக தெய்வமான சுவாமி ஐயப்பனை இழிவுப்படுத்தும் வகையிலும், தமிழகத்தில் தேவையற்ற மத குழப்பங்களை ஏற்படுத்தும் வகையிலும் தனது பாடல்களின் வரிகள் மூலம் வீண் மோதல்களை பரப்பிக் கொண்டிருக்கும் நீலம் பவுண்டேஷன் என்ற அமைப்பினை சார்ந்த இசைவாணி மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும், மத வெறுப்பினை ஏற்படுத்தும் சூழலை தடுத்திடுமாறும் இந்து முன்னணி சார்பாகவும், ஐயப்ப பக்தர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version