Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்! உடனடியாக கண்டனத்தை பதிவு செய்த தமிழக முதலமைச்சர்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீ நகருக்கு அருகே ரங்கிரி பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நேற்று பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். அப்போது துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்கள்.

இதற்கிடையே ஸ்ரீ நகரின் புறநகர்ப் பகுதியாக இருந்து வரும் பந்த்சவுக் அருகில் இருக்கின்ற ஜுவன் என்ற பகுதியில் காவல்துறையினரின் ரோந்து வாகனம் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இந்த வாகனத்தை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார்கள் இதில் அந்த வாகனத்தில் இருந்த 14 காவல்துறையினர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்த மீட்புக் குழுவைச் சார்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 14 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது இரண்டு காவல்துறையினர் உயிரிழந்து விட்டார்கள் மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு எந்தவிதமான பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை பயங்கரவாதிகளை தேடும் பணியை காவல்துறையினரும், எல்லை பாதுகாப்பு படையினர், உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், காஷ்மீரில் காவல்துறையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அவர் தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஸ்ரீ நகர் அருகே காவல்துறை பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல் நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த கொடூரமான தாக்குதலுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல், மேலும் காயமடைந்த மற்ற வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version