காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் 1 கோடி மரக் கன்றுகள் நடுவதாக ஈஷா மையம் அறிவிப்பு.!

0
105

காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் இயற்கை சார்ந்த நிகழ்வுகளுக்கு ஈஷா மையம் குரல் கொடுத்து வருகிறது. பல்வேறு சமூகசேவை போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டில் தங்களது “காவிரி கூக்குரல்’ இயக்கம் சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் துணையுடன் 1 கோடியே 10 லட்சம் மரக்கன்றுகளை நடப்போவதாக ஈஷா மையம் தெரிவித்துள்ளது.

 

இதுசம்பந்தமாக ஈஷ மையம் சார்பில் கூறியிருப்பதாவது; நதிகள் மீட்புக் குழு இயக்கத்தின் நிர்வாக குழு கடந்த 8 ஆம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. இதில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் காவிரி கூக்குரல் திட்டம் பற்றியும், மகாராஷ்டிராவில் செயல்படுத்தி வரும் வஹாரி நதி புதுப்பித்தல் பற்றியும் விவாதித்தனர்.

 

இதன்மூலம் கர்நாடக அரசின் புதிய திட்ட உத்தரவின்படி 70 லட்சம் மரக்கன்றுகளை காவிரி கூக்குரல் அமைப்பினர் கர்நாடக மாநிலத்தின் காவிரி பகுதியில் அமைந்துள்ள 9 மாவட்டங்களில் இருக்கும் 54 தாலுகா பகுதிகளில் அம்மாநில வனத்துறையுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் மாவட்ட ஆட்சியர், வனப்பாதுகாவலர்கள், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர்கள் உட்பட பலர் கலந்து செயல்பட்டு வருகின்றனர்.

 

தமிழகத்தில் உள்ள 36 ஈஷா நர்சரி பள்ளிகள் மூலம் 40 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து அந்தந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்போடு விவசாய நிலங்களில் நட உள்ளனர். கர்நாடகா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 1 கோடியே 10 லட்சம் மரங்களை நடும்பணியில் ஈஷா மையம் ஈடுபட்டு வருகிறது.