6000கன அடி நீர் சற்று நேரத்தில் மேட்டூர் அணைக்கு வந்தடைய போகிறது

0
128

தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணையிலிருந்து காவிரி நீர்திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடக எல்லையான
பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடகாவில் உள்ள கம்பெனி மற்றும் கிருஷ்ணசாகர் அணை நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் பாதுகாப்பு குறித்து தண்ணீரை திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கம்பெனி பகுதியில் ஐம்பதாயிரம் கண்ணாடியும்,கிருஷ்ணசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 5400 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

திறந்துவிடப்பட்ட நீர் 36 மணி நேரம் கழித்து தமிழகத்தை சேர்ந்த ஒகேனக்கல்லில் இன்று காலை 11 மணியளவில் வந்து சேர்ந்தது.ஒகேனக்கல்லில் காலை நிலவரப்படி 4700 கன அடி தண்ணீரில் இருந்து, 6400 கனஅடியாக வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் பிரதான அருவி மெயின் அருவி சினி அருவி, ஐவார் பாணி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. கர்நாடக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் தற்போது பெய்து வரும் மழையின் அளவு அணையில் இருந்து 43,933 கன அடியாகவும், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 3233 கன அடியாக தண்ணீர் குறைத்து திறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து கொண்டே வருகின்றனர்.

கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லில் வந்து சேர்ந்த நிலையில் இன்னும் ஐந்து மணி நேரத்தில் மேட்டூர் அணையை சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.