Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால்
அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் புலமையாலும்,தனது பேச்சுத் திறமையாலும்,மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞர் வைரமுத்து,தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து பாடல்கள் எழுதி வருகின்றார்.இதுவரை 7 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ள வைரமுத்து அவர்கள் பத்மபூஷன்,பத்மஸ்ரீ மற்றும் சாகித்திய அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளார்.

இதுமட்டுமின்றி கவிதைகள்,சிறுகதைகள், நாவல்கள் என பல்வேறு படைப்புகளையும் இவர் படைத்துள்ளார்.மேலும் சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு இவரது குரல் ஓங்கி வரும் நிலையில்,
தற்போது கவிஞர் வைரமுத்து அவர்கள் இருதய நோய் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2020ஆம் ஆண்டு,சுஷாந்த் சிங்,SPB, சின்னத்திரை சித்திரா,போன்ற பல்வேறு சினிமா பிரமுகர்களை இழந்த ரசிகர்களுக்கு,தற்போது வைரமுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும்,
ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version