சோகத்தில் மூழ்கிய காவியா அறிவுமணி காரணம் இதுதான்!

0
256

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடர் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். சகோதரர்களின் கூட்டுக்குடும்பம் மற்றும் பாசத்தை மையமாக கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியான ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த தொடரில் மீனா மற்றும் ஜீவா தம்பதியினருக்கு குழந்தை பிறந்திருக்கு என்ற சூழலில் தற்சமயம் தனம் கர்பமாக இருந்து வருகின்றார். இதற்கிடையில் முல்லை கதிர் ஆகியோர்களுக்கு இடையே சில ரொமான்ஸ் காட்சிகள் ஆரம்பமானது. அந்த சமயத்தில் தான் நடிகை சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தொடரில் மிகவும் பிரபலமான நடிகை சித்ரா திடீரென்று இவ்வாறு ஒரு முடிவை எடுத்தது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி தற்சமயம் நடித்து வருகிறார். அவர் பாரதிகண்ணம்மா தொடரில் இதற்கு முன்னரே நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்சமயம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக முல்லை கதாபாத்திரம் வெட்டியாக பிரபலமடைந்து இருக்கின்றார். இவர்களுக்கு இடையில் நெருக்கமான காட்சிகள் எதுவும் ஆரம்பிக்கவில்லை. சென்றவாரம் இதுதொடர்பாக உரையாற்றிய காவியா விரைவில் நெருக்கமான காட்சிகள் இருக்கும் என தெரிவித்து இருக்கின்றார்.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் காவியா பாரதிகண்ணம்மா தொடரை தான் மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்து பாரதிகண்ணம்மா நடிகை நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.