தேவையான பொருட்கள்
மீல் மேக்கர்-1/2கப்
சோம்பு- கால் டீஸ்பூன்
வெங்காயம்-2
வேகவைத்த பச்சைப்பட்டானி கால் கப்
மிளகாய்த்தூள்-2டீஸ்பூன்
தனியா தூள்- 1டீஸ்பூன்
கரம் மசாலா-1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய், தேவையான அளவு
கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
கொத்தமல்லி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும், தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும், மீல்மேக்கரை சூடான நீரில் போட்டு 1/2 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
பின்பு நீரை நன்றாக பிழிந்து எடுத்துவிட்டு மீல்மேக்கரை மிக்ஸியில் போட்டு துருவமாக அரைத்துக்கொள்ளவும், அதன்பிறகு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் சோம்பு போட்டு பொரிந்தவுடன் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு உள்ளிட்டவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை வாசனை போகும் வரை வேக வேண்டும் மிளகாய்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்தபடியாக அதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும் ,அடுத்ததாக அதில் வேக வைத்த பட்டாணி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும்போது துருவிய மீல்மேக்கரை போட்டு நன்றாக கிளற வேண்டும், கடைசியாக கொத்தமல்லியை தூவி பரிமாறினால் மீல்மேக்கர் ரெடி.