ADMK BJP: பாஜக அதிமுக-வுடன் கூட்டணி வைக்க வியூகம் வகுப்பதாக கமலாலய சுற்று வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாக அதிகளவு வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் கூட்டணியின்றி ஒரு இடத்தில் கூட பாஜக மற்றும் அதிமுக வால் வெற்றி பெற முடியவில்லை. மேற்கொண்டு ஆளும் கட்சியானது வலுப்பெற்று கொண்டே வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் அண்ணாமலை அரசியல் படிப்பிற்காக வெளிநாடு சென்ற பொழுது அதிமுக பாஜக இடையேயான பனிப்போர் முடிவடைந்து விடும் என எண்ணினர்.
ஆனால் அதை தவிடு பொடியாக்கும் விதத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தெரிவித்தார். அதே சமயம் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்றும் கூறியுள்ளார். ஆனால் அண்ணாமலை இந்தியா திரும்பியதும் அவரது செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரிதாக செய்தியாளர்களை சந்திக்காமலும் அதிமுக குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார். அதன் ஒரு படி மேலாக நேற்று எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரைப் போற்றி மோடியுடன் ஒப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது அனைத்தும் கூட்டணி குறித்து அடியெடுத்து வைப்பதாக தெரிகிறது. விஜய்யின் புதிய அரசியல் பயணமானது மேற்கொண்டு வாக்குகளை சிதற செய்யும் பட்சத்தில் இவர்கள் அனைவரும் ஒரு பான்மையாக இணையும் பட்சத்தில் கட்டாயம் திமுகவை வீழ்த்த முடியும். தற்பொழுது எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியில் கூட திருமா கலந்து கொள்ளாமல் தனது கூட்டணி கட்சியின் முக்கியத்துவத்தை அந்த இடத்தில் நிலைநாட்டி உள்ளார். அவர்களுக்குள் எவ்வளவுதான் உட்கட்சிப் பூசல் இருந்தாலும் கூட்டணி என்று வரும் பொழுது திமுக தான் என நிரூபித்து விடுகிறார்கள்.
மற்ற கட்சி கூட்டணிகளில் இந்த செயல்பாடு இல்லாததால் மக்களின் வாக்கானது சில்லு சில்லாக உடையக் கூடும். எடப்பாடி பழனிச்சாமி விஜய்யுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் கட்டாயம் பாஜகவுடன் கை கோர்க்க முடியாது. தனது முதல் மாநாட்டிலேயே திமுக மற்றும் பாஜக தான் தங்களது எதிரி என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தெரிவித்துள்ளாதால் அது முற்றிலும் சாத்தியமற்றது என கூறுகின்றனர்.