ஒரு சமையல் அறை என்பது அந்த குடும்பத்தின் மிகவும் முக்கியமான இடம். ஏனென்றால் அங்கிருந்து சமைக்க கூடிய உணவு தான் அந்த வீட்டில் உள்ள மக்களுக்கு உணர்வாக மாறுகிறது. சமையல் அறை என்பது தவக் கூடத்திற்கு சமமாகும். ஒரு பெண் என்பவள் அந்த இடத்திற்கு உரிய தலைவியாகவும், அரசியாகவும் இருந்து நமக்கு உணவினை அளித்தால் தான் நம்மால் அனைத்து செயல்களிலும் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
இவ்வாறு ஒரு குடும்பத்திற்கு ஆணிவேராக திகழக்கூடிய சமையலறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொருட்கள் என சில பொருட்கள் உள்ளன. அந்தப் பொருட்களை நமது சமையலறையில் வைத்துக் கொண்டால், ஐஸ்வரியம் பெருகி உணவு பற்றாக்குறை என்பது நமது வீட்டில் ஏற்படாமல் இருக்கும்.
1. அன்னபூரணியின் திருவுருவப்படம்: நமது பூஜை அறையில் இந்த படத்தினை வைத்துக் கொள்வதை காட்டிலும், சமையலறையில் நாம் சமைக்கும் பொழுது நம்மை பார்த்தவாறு இருக்கக்கூடிய சுவற்றில் மாட்டி வைப்பது என்பது அவசியம். அவ்வாறு மாட்ட இயலாவிட்டால் சமையலறையில் எந்த திசையில் வேண்டுமானாலும் மாட்டிக் கொள்ளலாம்.
தினமும் அந்த அன்னபூரணியை வணங்கி விட்டு, நமது அடுப்பினை பற்ற வைத்து சமைத்தோம் என்றால், நமது வீட்டில் அன்னக் குறை என்பது ஏற்படாமல் இருக்கும். அசைவம் சமைக்கும் பொழுது அந்தப் படத்தினை நமது பூஜை அறையில் வைத்து விட்டு, வீட்டினை சுத்தம் செய்த பின்னர் மீண்டும் சமையலறையில் மாட்டிக் கொள்ளலாம்.
2. மஞ்சள்: நமது சமையல் அறையில் உள்ள மஞ்சள் தூளாக இருக்கட்டும் அல்லது மஞ்சள் கட்டியாக இருக்கட்டும், அது எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. உப்பு: நமது சமையலறையில் உள்ள கல் உப்பாக இருந்தாலும், தூள் உப்பாக இருந்தாலும் அதனையும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் ஆகும். எனவே அதனை குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
4. நிறை குடம் தண்ணீர்: முந்தைய காலங்களில் பானை, குவளை, குடம் என வரிசையாக தண்ணீர் நிரப்பி வைத்திருப்பர். ஆனால் இந்த காலத்தில் தண்ணீர் குடம் என்பதே இல்லை. அவ்வாறு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி விட்டனர். ஆனால் ஒரு குடம் தண்ணீர் ஆவது சமையலறையில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
5. ஊறுகாய்: குபேரருக்கு மிகவும் பிடித்தமானது இந்த ஊறுகாய். எனவே ஊறுகாயை நமது சமையலறையில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் நல்லது. இந்த பொருட்கள் அனைத்தையும் வற்றாமல் நமது சமையலறையில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு இந்த பொருட்களை நமது சமையலறையில் கண்டிப்பான முறையில் வைத்தோம் என்றால், ஐஸ்வர்யம் நிறைந்த ஒரு வீடாக நமது வீடு மாறி இருக்கும்.