Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலைவாசலில் இதை வைத்தால் குலதெய்வம் உங்கள் வீட்டில் குடியேறிவிடும்!

தலைவாசலில் இதை நீங்கள் வைக்கும் பொழுது உங்களது குலதெய்வம் உங்கள் வீட்டில் தானாகவே குடியேறிவிடும்.

ஒரு வீட்டில் குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் எப்பொழுதுமே பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கும்.தேவையில்லாத பிரச்சினைகள், உடல்நல பாதிப்புகள், வீண் சண்டைகள், பணப்பிரச்சினை, பிள்ளைகளால் பிரச்சனை இது போன்ற ஏதாவது ஒரு பிரச்சனை வந்து நம்மை பாடாய் படித்திக் கொண்டே இருக்கும்.

இப்படி நடக்கும் பொழுது நீங்கள் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பார்ப்போம் என செல்வீர்கள் அல்லது வீட்டிற்கு அழைத்து பார்ப்பீர்கள். அப்படி நீங்கள் அழைத்து வரும் பொழுது அவர்கள் சொல்லும் முதல் வார்த்தை குலதெய்வத்தின் அருள் இல்லை என்றுதான் இருக்கும்.

அப்படி நமது குல தெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டுமெனில் நாம் என்ன செய்ய வேண்டும். தொடர்ச்சியாக குலதெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பூஜை அறையில் உள்ள குலதெய்வத்திற்கு என்று தனியாக விளக்கு ஏற்றி வைத்து வணங்கி வந்தால் பிரச்சினைகள் அனைத்தும் சுலபமாக தீர்ந்து விடும்.

ஒரு சிலர் வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வத்தை வணங்குவார்கள். ஊரிலேயே இருந்தால் அடிக்கடி எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் குலதெய்வத்தை வணங்கி வந்தால் மிகவும் நல்லது.

இல்லை ரொம்ப தொலைவாக குலதெய்வம் கோயில் உள்ளது என்றால், வருடத்திற்கு ஒரு முறை தான் வணங்க வேண்டும் என்றால், எந்த ஒரு தடங்கல் ஏற்பட்டாலும் அந்த நாளில் குடும்பத்தில் உள்ள அனைவரும் சென்று குலதெய்வத்தை வணங்கி விட வேண்டும்.

ஒரு சில காரணங்களால் நீங்கள் குலதெய்வத்தை வணங்க முடியாமல் போய்விட்டால், அடுத்த வருடம் போய்க் கொள்ளலாம் என்று நினைத்து விட்டால் அந்த வருடம் முழுவதும் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் தீரவே தீராது.

அப்படி ஒருவர் வீட்டில் குலதெய்வம் வரவேண்டுமென்றால் குலதெய்வத்தை வணங்கி அழைக்க வேண்டும். அப்படி அழைத்தால் குலதெய்வம் ஓடி வந்து உங்களது வீட்டில் குடியேறி விடுவார்கள்.

அப்படி தலைவாசலில் இதை வைக்கும் பொழுது குலதெய்வங்கள் ஓடோடி வந்து உங்களது வீட்டில் குடியேறி விடுவர்.

ஒரு சிகப்பு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி வாசனைப் பொருட்கள் எந்தெந்த வாசனை திரவியத்தை தண்ணீரில் சேர்க்க முடியுமோ அனைத்தையும் அந்த தண்ணீரில் கலந்து கொள்ளலாம். ஜவ்வாது, பன்னீர், ரோஜா இதழ்கள் என என்னென்ன சேர்க்க முடியுமோ அத்தனையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அந்த சிகப்பு துணி அந்த தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அந்த வாசனை திரவியங்களின் நறுமணம் ஆனது துணியில் ஒட்டும் வரை இருக்க வேண்டும். அந்தத் துணியை எடுத்து காய வைக்கும்பொழுது வாசனையானது ஒட்டிக்கொள்ளும்.

இப்பொழுது அந்தத் துணியில் மூன்று விரலி மஞ்சள்களை முடிச்சாக கட்டி துணியால் கட்டு முடியவில்லை என்றால் சிகப்பு நூலால் கட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

இதை எந்த நாட்களில் செய்யலாம் என்றால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை விளக்கேற்றி கடவுளுக்கு ஆராதனை காண்பித்து முடிந்து வைத்த சிவப்பு துணியை வைத்து குல தெய்வமே எங்கள் வீட்டில் குடியேற வேண்டும் என மனமுருக வேண்டி அந்த முடிச்சை கொண்டுபோய் தலைவாசலில் கட்ட வேண்டும்.

பதினொரு நாட்கள் இந்த துணியானது அப்படியே இருக்கவேண்டும். 11 நாளும் கடவுளுக்கு விளக்கேற்றி இந்த சிகப்பு துணி முடிச்சிக்கு தீபம் காட்டி குலதெய்வமே வருக என்று வழிபட வேண்டும்.

11 நாட்கள் முடிந்த பிறகு அந்த முடிச்சை அவிழ்த்து அதைக் கொண்டு போய் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் குலதெய்வமே அந்த முடிச்சோடு உங்கள் வீட்டிற்கு வந்து விடுவாள்.

 

Exit mobile version