Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் வீட்டின் குபேர மூலையில் இந்த ஒரு செடியை வைத்து பாருங்கள்..!! அதிர்ஷ்டம் தேடி வரும்..!!

இன்றைய காலத்தில் வீட்டிற்கு உள்ளேயும் சரி, வீட்டிற்கு வெளியேயும் சரி சில வாஸ்து செடிகளை வளர்ப்பது என்பது ஒரு பழக்கமாகி வருகிறது. பணப் பிரச்சனைகள் நீங்க வேண்டும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும், மகாலட்சுமி அம்சம் வேண்டும் என்பதற்காக பலவிதமான செடிகளை வாங்கி வீட்டில் வளர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் சில முக்கியமான வாஸ்து செடிகளுள் ஒன்று தான் மூங்கில் செடி. இந்த மூங்கில் செடியை வீட்டில் வைத்து வளர்ப்பதனால் என்ன பலன்? அதனை நமது வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? என்பது குறித்து காண்போம்.

எப்போதுமே நம்முடைய வீடுகளை சுற்றி மரங்கள், செடிகள் இருந்தாலே, நமக்கான ஆரோக்கியம் கூடும் என்பார்கள். இதற்கு காரணம் தாவரங்களிலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய ஆக்சிஜன் போன்ற பலவிதமான நன்மைகள் இருப்பதால் தான்.இவைகள் அதிக ஆக்சிஜன் வழங்குவதுடன், மாசுபடும் துகள்களை சிலவகை செடிகள் கவர்ந்து அழித்து விடும். இதனால் சுற்றுப்புறச்சூழலும் மாசுபடாமல் இருக்கும்.

வீட்டுக்கு வெளியே செடியை வளர்க்கும் போதே இப்படியென்றால், இந்த தாவரங்களை வீடுகளுக்குள் வைத்திருக்கும்போது, மேலும் ஆரோக்கியம் பெருகும். ஆனால், சில வகையான செடிகளை மட்டுமே வீட்டுக்குள் வளர்க்க முடியும். இதுகுறித்து வாஸ்துவில் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில செடிகளை வீடுகளில் வைத்து வளர்க்கக்கூடாது என்பார்கள். உதாரணமாக அத்திமரம், புளியமரம், பருத்தி செடி இது போன்ற சில செடிகளை வீடுகளில் வைத்து வளர்க்கக் கூடாது. அவ்வாறு வளர்த்தால் குடும்பத்தில் பிரச்சனைகள், உடல்நல குறைபாடு, குடும்ப முன்னேற்றம் ஆகியவை பாதிக்கப்படும் என்று வாஸ்து ரீதியாக கூறப்படுகிறது.

அந்த வகையில் வீட்டில் வைத்து வளர்த்தால் பல நன்மைகளை தரக்கூடிய, அதாவது சுற்றுச்சூழல் நன்றாக இருக்கவும், பாசிட்டிவ் எனர்ஜி பெருகவும், குடும்பத்தில் நிதி நெருக்கடி சீராகவும், மனதில் அமைதி பெறவும் குறிப்பிட்ட செடிகளை வளர்க்க வேண்டும். அந்தவகையில், பெரிதும் பயன்தரக்கூடிய செடிகளுள் ஒன்றுதான் மூங்கில் செடியாகும்.

2-3 அடி உயரம் வரை வளரக்கூடியவை மூங்கில் செடிகளை கிழக்கு திசையில் நட்டு வைக்கலாம். கிழக்கு திசைக்கான சூழல் இல்லாவிட்டால் வடக்கு, வடமேற்கு திசையிலும் நடலாம். இதனால் வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் கிடைப்பதுடன் பண நெருக்கடியும் சீராகும். படுக்கை அறையிலும் வைக்கலாம். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் கூடும்.

பிள்ளைகள் படிக்கும் அறையிலும் மூங்கில் செடிகளை வைக்கலாம்.
வீடுகள் மட்டுமல்லாமல், தொழில் செய்யும் அலுவலகங்களிலும், கடைகளிலும் வைக்கலாம். வீட்டின் வரவேற்பறையில் அழகான மேஜையின் மீது இதை வைக்கலாம். அலமாரிகளில் வைக்கலாம்.

மூங்கில் செடி இருக்குமிடமெல்லாம் சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதுடன், எதிர்மறை சக்தியும் அகற்றப்படும். ஆனால் எங்கு வைத்தாலும் சூரிய ஒளி நேராக படும்படி வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் செடி சுருங்கிவிடும். எக்காரணம் கொண்டும் இந்த செடியின் இலைகள் காய்ந்து விடக்கூடாது. அவ்வாறு காய்ந்தால் பணத்தட்டுப்பாடும் வந்துவிடும். மூங்கில் செடிக்கு உப்புத் தண்ணீரை ஊற்றக்கூடாது. சுத்தமான நீரை ஊற்ற வேண்டும்.

Exit mobile version