Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சருமத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டுமா? இதை செய்து பாருங்கள்.

மழைக்காலம் வந்துவிட்டது. அடுத்து குளிர்காலம் தான். குளிர்காலம் என்பது உடலிற்கு மிகவும் கடினமான பருவம். குளிர் மற்றும் வறண்ட குளிர்காலக் காற்று உங்கள் சருமத்தை மிகவும் வறண்டதாகவும், பாதிக்கக்கூடியதாக மாற்றும்.

நீங்கள் எவ்வளவு தான் தயார் செய்தாலும், குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை உங்களால் தவிர்க்க முடியாது. குளிர்காலத்தில் வறண்ட சருமம், தோல் சிவத்தல் மற்றும் இதுபோன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டவசமாக, இந்த குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை சமாளிக்க உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் உங்கள் சமையலறையே கொண்டுள்ளது.

குளிர்காலத்தில் ஏற்படும் தோல் பிரச்சனைகளை சமாளிக்க நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சிறந்த வீட்டு மருத்துவங்களை பார்க்கலாம்.
வறண்ட சிக்கலை எதிர்த்துப் போராட உங்கள் சருமத்திற்கு ஒரு நல்ல மாய்ஸ்சரைசேஷன் தேவை.

அதைச் செய்வதற்கு தேனை விட சிறந்த மருந்து வேற எதுவுமில்லை. இது சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. எனவே இது வறண்ட சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல், தேன் குழந்தைகளுக்கு நன்கு பேச்சு திறமையை கொடுக்கும் பண்பினை பெற்றுள்ளது. இது தோலின் தோற்றத்தை மேம்படுத்தவும் உதவி செய்கிறது . உங்கள் தோலில் தேனை தடவவும். பின்பு ,அதை 15-20 நிமிடங்கள் கழித்து, சாதாரண தண்ணீரைப் பயன்படுத்தி நன்கு கழுவவும். சிறந்த பலனைப் பெற ஒவ்வொரு நாளும் இந்த தீர்வை மீண்டும் செய்யவும்.

கற்றாழை ஒரு ஈரப்பதமூட்டும் பொருளாகும். இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. கற்றாழையின் தன்மையானது , கிருமி நாசினிகள், பாக்டீரியா போன்றவற்றை எதிர்த்து உடலை ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு உதவி செய்கிறது.

கற்றாழை ஜெல்லை காயமடைந்த இடங்களில் தடவி தோலில் மெதுவாக மசாஜ் செய்யவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு அதைக் கழுவலாம். இவ்வாறு செய்தால் காயமடைந்த இடத்தில தழும்புகள் ஏற்படாமல் இருக்கும் .

சர்க்கரையும் தேனும் ஒன்றாகக் கலந்து தடவினால் உதடுகளுக்கு நீரேற்றம் தரும் ஸ்க்ரப்பை உருவாக்கும் . சர்க்கரையின் கரடுமுரடான அமைப்பு சருமம் உரிக்கப்படுவதை தடுக்கிறது. தேன் நீரேற்றத்தை சேர்க்க உதவுகிறது மற்றும் உங்கள் உதடுகளை உள்ளிருந்து குணப்படுத்துகிறது.

உங்களுக்கு தேவையானது 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் தேன். இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலக்கவும்.

நன்கு கலக்கிய பின்பு அதனை உங்கள் உதடுகளில் தடவி 3-5 நிமிடங்கள் மெதுவாக உங்கள் உதடுகளை தேய்க்கவும். மற்றொரு 10 நிமிடங்களுக்கு அதை விட்டு பின்னர் கழுவவும். சிறந்த பலனைப் பெற இந்த தீர்வை வாரத்திற்கு 2-3 முறை செய்யவும்.

Exit mobile version