Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கீர்த்தி சுரேஷின் 15 வருட காதல் கணவன்.. இதோ இவர் தான்!!

Keerthi Suresh's love husband of 15 years.. Here he is!!

Keerthi Suresh's love husband of 15 years.. Here he is!!

Cinema update: கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமண வாழ்க்கையில் இணைய உள்ள நிலையில் தற்போது அவரின் வருங்கால கணவரின் புகைப்படம் வெளியானது.

கீர்த்தி சுரேஷ் முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தொடர்ந்து மலையாள படத்தில் நடித்து பின்பு தமிழ் படங்களில் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். இவர் நடிகையர் திலகம் படத்தை நடித்து சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பல வதந்திகள் பரவின. ஆனால் அந்த வதந்திகளை கீர்த்தி சுரேஷ் தந்தை இந்த தகவல் தவறானது என கூறினார். இந்த நிலையில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் என தகவல்கள் பரவி வந்தது. அந்த வகையில் அவருக்கு இப்போது வயது 32. எனவே அவரின் வீட்டில் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிவிட்டார்களாம்.

கீர்த்தி சுரேஷ்க்கு வரும் டிசம்பர் மாதம் கோவாவில் திருமணம் என செய்திகள் வந்த நிலையில் தற்போது அவர் கணவர் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆண்டனி தட்டில் என்பவர் கொச்சியில் உள்ள கல்லூரியில் இளங்கலை படித்துக்கொண்டிருந்தார். அந்த நேரம் கீர்த்தி சுரேஷ் உயர் கல்வி படித்துள்ளார்.

அவர்கள் இருவரும் முதலில் 15 வருடங்களாக நட்பாக பழகி அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்கள் திருமணம் கோவாவில் நடந்து பின்பு சென்னையில் பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடக்கவுள்ளது என கூறுகின்றனர். தற்போது ஆண்டனி தட்டில் ஒரு பிசினஸ் மேனகா இருக்கிறார் என தகவல் வந்துள்ளது.

Exit mobile version