சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு ‘குட்லக் சகி’ என்ற படத்தின் டீஸர் வெளியீடு செய்வதாக படத்தின் தயாரிப்பாளர் சுதீர் சந்திரா பதிரி அறிவித்துள்ளார்.
இந்தப்படத்தில் ஹீரோயினை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளர் ஷ்ராவ்யா வர்மா வழிநடத்த, முழுக்க பெண்கள் நிறைந்த குழு என்ற பெருமை இந்தத் திரைப்படத்துக்கு இருக்கிறது.
இந்தப்படத்தை நாகேஷ் குக்குனூர் இயக்கி உள்ளார். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் இருக்க, படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
இந்தப்படத்திற்கு காதல். காமெடி பலவித சுவாரஸ்யங்கள் கலந்த வித்தியாசமான படம் என்று படக்குழு சார்பில் பல்வேறு சுவாரஸ்யங்கள் உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடிக்கிறார்.
ஆகையாலே இந்த படத்தின் டீஸரை மதிப்புமிக்க திருநாளான சுதந்திர தின நாளை தேர்வு செய்ததாக படத்தின் தயாரிப்பாளர் சுதீர் சந்திரா பதிரி தெரிவித்துள்ளார்.