Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தன்னுடைய காதல் கதையை ஓப்பனாகக் கூறிய கீர்த்தி சுரேஷ்! “எங்களுக்குத் தான் ஏற்கனவே தெரிஞ்சிருச்சே” என்று கலாய்த்து வரும் ரசிகர்கள்!

Keerthy Suresh openly told his love story! "We already know" fans who are shouting!

Keerthy Suresh openly told his love story! "We already know" fans who are shouting!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை “கீர்த்தி சுரேஷ்”. தன்னுடைய துறுதுறு நடிப்பால் மக்களின் மனதைக் கவர்ந்தவர். “ரஜினி முருகன்” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இவர் அறிமுகமானார். அப்போதே ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவிட்டார். இவர் நடிப்பில் வெளிவந்த “ரகு தாத்தா” என்ற திரைப்படம் மக்களின் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் ஈர்த்தவர்.

சமீபத்தில் இவர் ஒருவருடைய காதல் வலையில் விழுந்துள்ளார் என்று ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கள் பேசப்பட்டன. பொதுவாக, நடிக்கும்போதே கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அந்தந்த படங்களின் நடிகர்களைச் சேர்த்து வைத்தே பல வதந்திகள் வந்தன. இப்போது வந்துள்ள பேச்சுக்கு கீர்த்தி சுரேஷ் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தனது 15 வருடக் காதல் கதையை வெளிப்படையாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “15 இயர்ஸ் அண்ட் கவுண்டிங்” என்று குறிப்பிட்டுள்ளார். அதுவும், தனது திருமண தேதி நெருங்கும் தருவாயில் தான் இந்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதனை பார்த்த ரசிகர்களும், “அக்கா, நீங்க ரொம்ப லேட், எங்களுக்குத்தான் ஏற்கனவே தெரிஞ்சிருச்சே” என்று கலாய்த்து வருகின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடைய காதலன் ஆண்டனி தட்டிலை கோவாவில் வரும் டிசம்பர் 11, 2024 அன்று திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறப்படுகிறது. இவருடைய திருமணத்திற்குக் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல பிரபலங்கள் படை திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெறும் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது. இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஷால், விக்ரம் போன்ற பல முன்னணிப் பிரபலங்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version