Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமணத்திற்கு டிக் அடித்த கீர்த்தி சுரேஷ்!! விரைவில் மணப்பெண்ணாக மாறுகிறார்!!

Keerthy Suresh ticked for marriage!! Soon to be a bride!!

Keerthy Suresh ticked for marriage!! Soon to be a bride!!

Cinema Update: பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு வரும் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி கோவாவில் திருமணம் நடக்கவுள்ளது.

கீர்த்தி சுரேஷ் முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தொடர்ந்து மலையாள படத்தில் நடித்து பின்பு தமிழ் படங்களில் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். இவர் நடிகையர் திலகம் படத்தை நடித்து சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் பெற்றார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பல வதந்திகள் பரவின. ஆனால் அந்த வதந்திகளை உடைத்தெறியும் வகையில் கீர்த்தி சுரேஷ் தந்தை இந்த தகவல் தவறானது என கூறினார். இந்த நிலையில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்க்கு திருமணம் என தகவல்கள் பரவி வந்தது. அந்த வகையில் இவருக்கு இப்போது வயது 32. எனவே அவரின் வீட்டில் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிவிட்டார்களாம்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் சுமார் 4 வருடங்களாக சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெறுகிறது என்றும் கூறி வருகிறார். மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி இந்த திருமணம் நடைபெற உள்ளது. அது மட்டும் அல்லாமல் 50 முதல் 70 பேருக்கு திருமண அழைப்பு ரகசியமாக சென்று இருக்கிறது என கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் முக்கியமானவர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.

Exit mobile version