Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்த கேரள இளம்பெண்

கடந்த நான்கு ஆண்டுகளாக தென் கொரியாவில் ஆராய்ச்சி மாணவியாக படித்து வரும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்- ஷெர்லி தம்பதியின் மகள் லீஜா ஜோஸ் (28) பிப்ரவரி மாதம் விடுமுறைக்காக கேரளா திரும்பியிருந்த அவர், கொரோனா பரவல் காரணமாக உரிய நேரத்தில் தென் கொரியா திரும்ப முடியாமல் போனது.தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி தென் கொரியா திரும்பியுள்ளார். இதனையடுத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார். கொரோனா தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்.

இருப்பினும் எந்த பலனும் இல்லை என்ற நிலையில், அவர் ஊருக்கு திரும்ப முடிவு செய்து, வியாழக்கிழமை மாலை விமான நிலையம் சென்றுள்ளார்.ஆனால் சில நிமிடங்களில் விமான நிலையத்தில் வைத்தே அவர் சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்ததாக தெரியவந்துள்ளது.  லீஜா மரணமடைந்த தகவல் உறவினர்களுக்கு தெரியவந்துள்ள நிலையில்,அரசியல் தலைவர்களின் உதவியுடன் உடலை கொண்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version