இனி சனிக்கிழமையும் முழு பள்ளி வேலை நாள்..!! மாணவர்களுக்கு அதிர்ச்சி..!!
தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள்
எப்பொழுது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் கடந்த ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழகத்தில் கோடை வெயில் மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதம் வரை அதிகமாக காணப்பட்டது. மேலும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது. இந்நிலையில் கோடை மழை காரணமாக வெப்ப நிலை சற்றே தணிந்தது. கோடை மழைக்கு பிறகு வெப்பநிலை சற்று கூடுதலாக இருந்ததால் மீண்டும் பள்ளியின் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி வரும் ஜூன் 10ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
பள்ளிகள் திறந்ததும் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டில் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்படும் என்று காலண்டரில் குறித்து வைத்துக் கொள்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் தான் கேரளா பள்ளிகளுக்கு இந்த கல்வியாண்டு 220 நாட்கள், வேலை நாட்களாக (school working days 2024) அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கேரளா அரசு வெளியிட்ட புதிய காலண்டர் அறிவிப்பின்படி, இந்த கல்வியாண்டின் வேலை நாட்களாக மொத்தம் 220 நாட்களை நிர்ணயம் செய்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி 1 முதல் 10 வகுப்புகளுக்கு 25 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக இருக்கும்.
கேரளாவில் கடந்த ஆண்டு 195 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு 220 நாட்கள் வேலை நாட்களாக கேரளா அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரள கல்வி விதிகளின்படி ஒரு கல்வி ஆண்டுக்கு 220 வேலை நாட்கள் தேவை. கடந்த ஆண்டு கல்வி அமைச்சர் சிவன்குட்டியின் உத்தரவின் பெயரில் வேலை நாட்கள் 204 ஆக உயர்த்தப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட கல்வி வேலை நாட்களை குறைத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று மூவாட்டுப்புழா பள்ளி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். பிறகு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கேரள அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. உத்தரவின் பெயரில் மனுதாரர்களிடம் கேரளா அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. பேச்சு வார்த்தையில் சாதகம் எட்டப்படவில்லை. எனவே இதனை எதிர்த்து மீண்டும் உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தினால் கேரளா அரசு இவ்வாறு பள்ளி வேலை நாட்களை உயர்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: நான் முதல்வன் திட்டம்: மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி தரும் தமிழக அரசு!! விண்ணப்பம் செய்வது எப்படி?