பால்கனியில் இருந்து பின்புறம் சாய்ந்தப்படி தலை கீழாக விழுந்தவரை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய பதபதைக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கட்டிடம் ஒன்றின் பால்கனியில் 3 பேர் நின்றுக் கொண்டிருந்தனர். அந்த பால்கனியின் பக்கச்சுவர்கள் இடுப்பளவே இருக்க, மூவரும் அதில் சாய்ந்தபடி நின்றிந்தனர். அப்பொழுது நின்றிருந்த மூவரில் காவி நிற சட்டை அணிந்த நபர் பின்புறமாக மயங்கி விழுந்தார். பால்கனியில் இருந்து அந்த நபர் தலைகீழாக கீழே விழ அருகில் நின்றிந்த நபர், கண்ணிமைக்கும் நேரத்தில் மயங்கிய நபரின் கால்களை பற்றிக் கொண்டார்.
அடுத்த சில வினாடிகளில் அருகிலிருந்தவர்கள் எல்லாம் ஓடி வந்து அந்த நபரை பற்றிக் கொண்டார். போலீசார் ஒருவரின் உதவியுடன் சேர்ந்து மயங்கியபடி இருந்த நபரை மீட்டனர். உடல் முழுவதுமாக கீழே சாய்ந்த நபரை மேலே தூக்கிய பிறகும் மயக்க நிலையிலேயே இருக்க முதலுதவி அளிக்கப்பட்டது.
தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன், கீழே சாய்ந்த நபரை உடனடியாக சுதாரித்துக் கொண்டு காப்பாற்றிய நீல நிற சட்டை அணிந்திருந்த நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
😱😱😱😱😱 pic.twitter.com/9GPTce1xnt
— Anu Satheesh 🇮🇳🚩 (@AnuSatheesh5) March 19, 2021