பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரளா அமைச்சர் எம்.பி.ராஜேஷ் நன்றி! காரணமென்ன?

0
224
#image_title

பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரளா அமைச்சர் எம்.பி.ராஜேஷ் நன்றி! காரணமென்ன?

பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரளா காவல்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் நன்றி தெரிவித்துள்ளார். முகநூல் மூலம் முதன்முறையாக நன்றி சொல்லத் தோன்றியது என்பதற்கான காரணத்தையும் அமைச்சர் விளக்கியுள்ளார்.

கேரளாவிற்கு இரண்டு நாள் சுற்றுபயணம் வந்த பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார். கேரளாவின் பெருமைக்குரிய இரண்டு திட்டங்களைத் தொடங்கிவைத்து, இந்தியாவுக்கே கேரளா முன்மாதிரி என்று நரேந்திர மோடி கூறியதாக கேரளா காவல்த்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கேரளாவை முன்மாதிரி என்று மோடி கூறும்போது, கேரளாவின் மாற்றுக் கொள்கைகளும், மாற்று அரசியலும் முன்மாதிரி என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்றும், அந்த அரசியல் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் இந்தியா முழுவதும் ஒரு மாற்று உருவாகும் போது, இந்த சாதனைகளை நாட்டினால் பெற முடியும் என்றும் ராஜேஷ் குறிப்பிட்டார்.

வாட்டர் மெட்ரோவுக்கு ரூ.1136.83 கோடியும், டிஜிட்டல் பூங்காவுக்கு ரூ.1500 கோடியும் மாநில அரசு முழுமையாக செலவளித்துள்ளது இவை இரண்டு புதுமையான திட்டங்கள் ஆகுமெனவும். கேரளா இந்தியாவுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது என்று நரேந்திர மோடி கூறும்போது அதற்கு இன்னொரு சிறப்பும் உண்டு.

இதே நரேந்திர மோடிதான் 2016 மே மாதம் கேரளாவிற்கு வந்து சோமாலியாவை விட கேரளா மோசமானது என்று சொல்லியிருந்தார். அவர் இப்போது அந்த வார்த்தைகளை விழுங்க வேண்டியிருந்தது. அந்த ஆட்சேபனை சரி செய்யப்பட்டது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கே கேரளா முன்னுதாரணமாக உள்ளது என்பதை மோடி இறுதியாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கேரளாவின் சிறப்பையும், பாஜக வகுத்த மாதிரியின் தோல்வியையும் அம்பலப்படுத்தியதற்காக மீண்டும் பிரதமருக்கு எம்பி ராஜேஷ் நன்றி தெரிவித்தார்.