கேரள மாடல் அழகிகள் மரணித்த விபத்தில் துப்பு துலக்கிய போலீசார்! கைது செய்யப்பட்ட ஓட்டல் அதிபர்! திடுக்கிடும் தகவல்கள்!
நவம்பர் மாதம் 1ஆம் தேதி கொச்சியில் ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் மிஸ் கேரளா பட்டத்தை வென்ற ஹன்சி கபீர் என்ற 25 வயது அழகியும், ரன்னர் அப் பட்டத்தை வென்ற அஞ்சனா ஷாஜன் என்ற 26 வயது ஆயுர்வேதா மருத்துவர் மற்றும் அவர்களுடைய ஆண் நண்பர்கள் உள்ளிட்டோர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.
மேலும் ஒரு ஆயுர்வேத மருத்துவரான அஞ்சனா ஷாஜன் முதல் முறையாக அழகி போட்டியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் அவர்கள் கொச்சி அருகே அதிகாலை நேரத்தில் சென்றபோது கார் குப்புறக் கவிழ்ந்து மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போவிபத்துக்குள்ளானது.
இது குறித்து போலீசார் தற்போது ஹோட்டல் அதிபர் ஒருவரை கைது செய்துள்ளனர். போலீசார் கைது செய்துள்ள ராய் வயலாட் எனும் நபர் நம்பர் 18 என்னும் ஹோட்டலின் உரிமையாளர் ஆவார். மேலும் அந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை அளித்த குற்றத்திற்காக அவருடன் சேர்ந்து ஆறு ஓட்டல் ஊழியர்களையும் கைது செய்துள்ளனர்.
கேரளாவின் பாலரிவட்டம் காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக காரின் ஓட்டுனர் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் ஹோட்டல் அதிபரிடம் கடந்த செவ்வாய் கிழமை 11 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார். மேலும் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று போலீசாரால் எதிர்பார்க்கப்படுகிறது.