Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சுவையான ராகி இடியாப்பம் ரெசிபி எவ்வாறு செய்வது?
அதிக சத்துக்கள் நிறைந்த ராகியில் கேரளா பாணி இடியப்பம் செய்வது சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.இந்த ராகி இடியாப்பத்தை பூ போன்று சாஃப்டாக எவ்வாறு செய்யலாம் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)ராகி மாவு – 1 1/2 கப்
2)சர்க்கரை – தேவையான அளவு
3)தேங்காய் துருவல் – 1 கப்
4)உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பிறகு அதில் 1 1/2 கப் ராகி மாவு மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ராகி மாவு கெட்டி பிடிக்கும் என்பதினால் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.மாவு நன்றாக கலக்கப்பட்ட பின்னர் எடுத்து விட்டு இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு இட்லி தட்டு வைத்து அதன் மேல் காட்டன் துணி போடவும்.ஒரு இடியாப்ப அட்சியில் தயாரித்து வைத்துள்ள ராகி மாவை சேர்த்து இட்லி தட்டில் இடியப்பம் பிழிந்து விடவும்.
15 நிமிடம் வரை வேகவைக்கவும்.பிறகு தயரான இடியாப்பத்தின் மேல் தேங்காய் துருவல்,நாட்டு சர்க்கரை தூவி விடவும்.விருப்பப்பட்டால் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.இந்த ராகி இடியாப்பத்தை தேங்காய் பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் அதிக சுவையாக இருக்கும்.