Kerala Recipe: ‘குஸ்கா’ ரெசிபி கேரளா பாணியில் செய்வது எப்படி?

0
114
#image_title

Kerala Recipe: ‘குஸ்கா’ ரெசிபி கேரளா பாணியில் செய்வது எப்படி?

பாசுமதி அரிசியில் கேரளா ஸ்டைலில் சுவையான குஸ்கா எவ்வாறு செய்வது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பாசுமதி அரிசி – 1 கப்
2)நெய் – 100 மில்லி
3)பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
4)சீரகம் – 1/4 தேக்கரண்டி
5)இலவங்கம் – 3
6)பட்டை – 1
7)பிரியாணி இலை – 1
8)வெங்காயம் – 1/4 கப்
9)இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
10)தக்காளி – 1/2 கப்(நறுக்கியது)
11)பச்சை மிளகாய் – 2
12)கொத்தமல்லி இலை – சிறிதளவு
13)எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
14)உப்பு – தேவையான அளவு
14)ஏலக்காய் – 2

செய்முறை:-

ஒரு கப் பாசுமதி அரிசியை தண்ணீர் போட்டு 1/2 மணி நேரத்திற்கு ஊற விடவும். பிறகு அடுப்பில் ஒரு குக்கர் வைத்து நெய் ஊற்றி சூடாக்கவும். அடுத்து பெருஞ்சீரகம், சீரகம், பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை போட்டு பொரிய விடவும்.

பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும்.

அதன் பின்னர் தக்காளி, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். அனைத்தும் நன்கு வெந்து வந்த பின்னர் தேவையான அளவு உப்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

5 நிமிடங்களுக்கு பின்னர் ஊற வைத்த பாசுமதி அரிசியை போட்டு கிளறி குக்கரை மூடிவிடவும். பிறகு 1 விசில் விட்டு எடுத்தால் குஸ்கா ரெடி. விருப்பப்பட்டால் சிறிது நெய் சேர்த்து சாப்பிடலாம்.