Kerala Recipe: காரசாரமான கப்பக்கிழங்கு பொரியல் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?
கால்சியம்,வைட்டமின் சி,பாஸ்பரஸ் சத்துக்கள் கொண்ட கப்பக்கிழங்கை கேரளர்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர்.கப்பக்கிழங்கானது மரவள்ளிக்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கிழங்கு சரும பிரச்சனை,முடி உதிர்தல்,உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.இதில் வடை,அடை,தோசை,வறுவல்,பாயாசம் போன்ற பல ரெசிபிகள் செய்யப்படுகிறது.அந்தவகையில் கப்பக்கிழங்கில் சுவையான பொரியல் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)கப்பக்கிழங்கு
2)தேங்காய் எண்ணெய்
3)கடுகு
4)கறிவேப்பிலை
5)உப்பு
6)வர மிளகாய்
7)உளுந்து பருப்பு
8)கொத்தமல்லி இலை
9)பெரிய வெங்காயம்
செய்முறை:-
ஒரு முழு கப்பக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் போட்டு அலசி சுத்தம் செய்யவும்.
இதை ஒரு குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றவும்.பிறகு சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு 3 முதல் 4 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
அதன் பிறகு கடுகு,உளுந்து பருப்பு போட்டு பொரிய விடவும்.பின்னர் கறிவேப்பிலை,நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
அதன் பிறகு காரத்திற்காக வர மிளகாய் கிள்ளி போட்டு வதக்கவும்.பின்னர் வேக வைத்த கப்பக்கிழங்கை போட்டு கிளறி விடவும்.இறுதியாக சிறிது கொத்தமல்லி தழை தூவி கிளறி இறக்கினால் சுவையான கப்பக்கிழங்கு பொரியல் தயார்.