Kerala Recipe: கேரளா ஸ்டைல் மணக்கும் பூண்டு தொக்கு – சுவையாக செய்வது எப்படி?
சுவையான கேரளா பூண்டு தொக்கு செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)பூண்டு – 1 கப்
2)வர மிளகாய் – 5
3)கடுகு – 1 தேக்கரண்டி
4)வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
5)மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
6)மிளகாய்த் தூள் – 1/2 தேக்கரண்டி
7)புளிக்கரைசல் – 3 தேக்கரண்டி
8)தேங்காய் எண்ணெய் – 5 தேக்கரண்டி
9) உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
ஒரு கப் அளவு பூண்டை தோல் நீக்கி தண்ணீரில் போட்டு சசுத்தம் செய்து கொள்ளவும்.ஒரு கிண்ணத்தில் ஒரு எலுமிச்சம் பழ அளவு புளியை போட்டு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 5 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.அதில் கடுகு மற்றும் வெந்தயத்தை போட்டு பொரிய விடவும்.
பிறகு அதில் சுத்தம் செய்து வைத்துள்ள பூண்டை போட்டு மிதமான தீயில் வதக்கவும்.இதற்கிடையில் ஒரு கிண்ணத்தில் வரமிளகாய் போட்டு தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
இந்த மிளகாயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை வதங்கி கொண்டிருக்கும் பூண்டில் போட்டு வதக்கி எடுக்கவும்.
அதன் பின்னர் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு,மிளகாய் தூள் மற்றும் புளி கரைசலை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.பூண்டு கலவை நன்கு சுண்டி வந்ததும் கடாயை இறக்கினால் சுவையான பூண்டு தொக்கு ரெடி.