Kerala Recipe: கேரளா ஸ்டைல் போண்டா – சுவையாக செய்வது எப்படி?
நம் அனைவருக்கும் விருப்ப எண்ணெய் பண்டமாக இருப்பது போண்டா. இதை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)கடலை மாவு
2)அரிசி மாவு
3)சமையல் சோடா
4)மிளகாய் தூள்
5)உப்பு
6)தேங்காய் எண்ணெய்
7)பெரிய வெங்காயம்
8)கறிவேப்பிலை
9)மல்லி தழை
10)பச்சை மிளகாய்
செய்முறை:-
இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதேபோல் இரண்டு கொத்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் மல்லி தழையை நறுக்கி கொள்ளவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு 2 கப் மற்றும் அரிசி மாவு 1/2 கப் அளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதன் பின்னர் 1/2 தேக்கரண்டி சமையல் சோடா, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
தொடர்ந்து நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி தழை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் தயார் செய்து வைத்துள்ள மாவை கொண்டு போண்டா சுட்டு எடுக்கவும்.
இந்த போண்டா பார்க்க மிருதுவாகவும் சாப்பிட மிகவும் சுவையாகவும் இருக்கும்.