Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெஜ் தேங்காய் பால் ரெசிபி!!

0
140
#image_title

Kerala Recipe: கேரளா ஸ்டைல் வெஜ் தேங்காய் பால் ரெசிபி!!

கேரளா மக்களின் விருப்ப உணவான வெஜ் தேங்காய் பால் சுவையாக செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் பால் – 3 கப்
2)கேரட் – 1
3)பீன்ஸ் – 3
4)உருளைக்கிழங்கு – 1(மீடியம் சைஸ்)
5)உப்பு – தேவையான அளவு
6)தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
7)இஞ்சி – 1 துண்டு
8)பூண்டு – 2 பற்கள்
9)பச்சை மிளகாய் – 3
10)மிளகு – 1/2 தேக்கரண்டி
11)கறிவேப்பிலை – 1 கொத்து
12)கொத்தமல்லி தழை – சிறிதளவு
13)வெங்காயம் – 1

செய்முறை:-

முதலில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் சேர்க்கவும். அதன் பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அவற்றை வேக விடவும். பிறகு தேவையான அளவு உப்பு, மிளகாய் மற்றும் அரைத்த தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

மற்றொரு அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதன் பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இதை கொதிக்கும் தேங்காய் பாலில் சேர்க்கவும். அதன் பின்னர் வாசனைக்காக சிறிது மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் வெஜ் தேங்காய் பால் ரெடி. இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி இளஞ்சூட்டில் குடித்தால் வெஜிடபுள் சூப் போன்று இருக்கும்.