Kerala Recipe: மட்டன் கறி இப்படி செய்தால் உடனே காலியாகி விடும்!!

0
105
Kerala Recipe: Mutton curry will be empty if you do this!!

Kerala Recipe: மட்டன் கறி இப்படி செய்தால் உடனே காலியாகி விடும்!!

ஆட்டு இறைச்சியில் கேரளா ஸ்டைலில் சுவையான கறி குழம்பு செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)ஆட்டு கறி – 1/4 கிலோ
2)தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி
3)இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
4)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
5)பச்சை மிளகாய் – 1(நறுக்கியது)
6)சின்ன வெங்காயம் – 10(நறுக்கியது)
7)தக்காளி – 1(நறுக்கியது)
8)கறிவேப்பிலை – 1 கொத்து
9)உப்பு – தேவைக்கேற்ப
10)தனி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
11)தேங்காய் பால் – 1/2 கப்
12)கரம் மசால் – 1 தேக்கரண்டி
13)மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி
14)கடுகு – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் வாங்கி வந்த ஆட்டு கறியை மஞ்சள் உப்பு போட்டு கழுவி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேஙகாய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு கடுகு,கறிவேப்பிலை போட்டு பொரிய விடவும்.பின்னர் நறுக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி எடுக்கவும்.

அதன் பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.பிறகு நறுக்கிய பச்சை மிளகாய்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,கரம் மசால்,கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

பிறகு சுத்தம் செய்த ஆட்டு கறியை போட்டு வதக்கி எடுக்கவும்.பிறகு அரைத்த தேங்காய் பால் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கறி நன்கு வெந்து வந்ததும் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.இவ்வாறு செய்தால் மட்டன் கறி மிகவும் சுவையாக இருக்கும்.