kerala recipe: போஹா ஸ்வீட் இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!

0
203
#image_title

kerala recipe: போஹா ஸ்வீட் இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!

போஹா(அவல்), தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து செய்யப்படும் இனிப்பு பண்டம் கேரளாவில் பேமஸான ஒன்றாகும். இந்த இனிப்பை எவ்வாறு செய்யலாம் என்ற செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)போஹா – 1/2 கப்
2)பொடித்த வெல்லம் – 1/4 கப்
3)நெய் – தேவையான அளவு
4)முந்திரி – 10
5)துருவிய தேங்காய் – சிறிதளவு
6)உலர் திராட்சை – 4
7)ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
8)வாழைப்பழம் – பாதியளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிது நெய் ஊற்றவும். அவை சூடானதும் அதில் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுக்கவும்.

இதை ஒரு தட்டிற்கு மாற்றி விட்டு அடுத்து துருவிய தேங்காய் சேர்த்து கருக்கிடாமல் நன்கு வதக்கவும்.

தேங்காய் துருவல் பொன்னிறமாக வதங்கிய பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.

அடுத்து அதே வாணலியில் வெல்லம் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதி வந்ததும் போஹாவை போட்டு
நன்கு கிளறி விடவும்.

அதன் பின்னர் நெயில் வதக்கி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து கிளறவும். தண்ணீர் சுண்டி போஹா நன்கு வெந்து வந்த பின்னர் நெயில் வதக்கிய திராட்சை, முந்திரி சேர்த்து நன்கு கிளறி விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து விட்டு வாசனைக்காக சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும். அதன் பின்னர் பாதி வாழைப்பழத்தை பிசைந்து அதில் கலந்து சாப்பிடவும். இந்த போஹா ஸ்வீட் சாப்பிட மிகவும் தித்திப்பாக இருக்கும்.