Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேரளா ஸ்பெஷல் பிளாக் சாயா!! சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு பொருள் தான்!!

#image_title

கேரளா ஸ்பெஷல் பிளாக் சாயா!! சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு பொருள் தான்!!

நம் அனைவருக்கும் பிளாக் சாயா மிகவும் பிடித்த பானம். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவகையாக உள்ளது. பால் டீ, காப்பி செய்து பருகுவதற்கு பதில் சாயா செய்து பருகுவது நல்லது. இந்த சாயாவை கேரளா ஸ்டைலில் செய்தால் குடிக்க மிகவும் சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் இருக்கும்.

பிளாக் சாயா பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்:-

*செரிமான கோளாறு நீங்கும்

*கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்

*பல் சொத்தை தடுக்க உதவும்

*சிறுநீரக கோளாறு சரி செய்ய உதவும்

கேரளா ஸ்பெஷல் பிளாக் சாயா செய்யும் முறை:-

தேவையான பொருட்கள்:-

*தண்ணீர் – 1 கப்

*தேயிலை தூள் – 1/2 தேக்கரண்டி

*சர்க்கரை – 2 தேக்கரண்டி

*எலுமிச்சைச் சாறு – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும். பின்னர் 1/2 தேக்கரண்டி அல்லது உங்கள் விருப்பத்திற்கேற்ப தேயிலை தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

தேயிலை தூள் நிறம் கொதிக்கும் நீரில் இறங்கியதும் அடுப்பை அணைக்கவும். பிறகு இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டிக் கொள்ளவும். அதில் 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து 1 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் பருகுவதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். கேரளா மக்களின் பிளாக் சாயா அதிக ருசியுடன் இருக்க காரணம் இதுவே.

இந்த பிளாக் சாயா பிரியாணி உண்டப் பின் பருகுவதை கேரளா மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். காரணம் எலுமிச்சை செரிமானத்திற்கு உகந்த பொருள் ஆகும்.

Exit mobile version