Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேரளா ஸ்பெஷல் “கூட்டு கறி” – செய்வது எப்படி?

#image_title

கேரளா ஸ்பெஷல் “கூட்டு கறி” – செய்வது எப்படி?

நம்மில் பெரும்பாலானோருக்கு காய்கறிகள் வைத்து சமைக்கப்படும் கூட்டு உணவு என்றால் அலாதி பிரியமாக இருக்கிறது. இவை ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை ஆகும். அந்த வகையில் சேனைக் கிழங்கு, வாழைக்காய் வைத்து தயார் செய்யப்படும் கூட்டு கேரளாவில் பேமஸான ஒன்றாகும். இந்த கூட்டு அதிக சுவையுடன் இருக்க கேரளா மக்களின் பேவரைட் உணவுப் பொருளான கருப்பு கொண்டைக்கடலையை பயன்படுத்த வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

வேக வைக்க:-

*சேனைக் கிழங்கு – 1/4 கப்

*வாழைக்காய் – 1/4 கப்

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி

*கருப்பு கொண்டை கடலை – 150 கிராம்

அரைக்க:-

*தேங்காய் துருவல் – 1/4 கப்

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 1/2 தேக்கரண்டி

வதக்க தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

*கடுகு உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

*வர மிளகாய் – 3

*கருவேப்பிலை – 1 கொத்து

*தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் 150 கிராம் கருப்பு கொண்டைக்கடலை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற விடவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1/4 கப் நறுக்கிய சேனைக் கிழங்கு, 1/4 ;வாழைக்காய் சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து வேக விடவும்.

அடுத்து ஒருமிக்ஸி ஜாரில் 1/4 கப் தேங்காய் துருவல், 1/4 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி கருப்பு மிளகு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இந்த விழுதை வெந்து கொண்டிருக்கும் காய்கறி கலவையில் சேர்த்து கொள்ளவும். அதனோடு ஊற வைத்துள்ள கருப்பு கொண்டைக்கடலை சேர்த்து நன்கு கிளறி வேக விட்டு இறக்கவும்.

அடுப்பில் வாணலி வைத்து 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் . அவை சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விடவும். பின்னர் 1 கோத்து கருவேப்பிலை, 3 வர மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் 3 தேக்கரண்டி அளவு தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வறுக்கவும்.

பின்னர் வேக வைத்துள்ள காய்கறி கலவையை வதங்கி கொண்டிருக்கும் தேங்காய் கலவையில் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும். கூட்டு கறி இப்படி செய்தால் கேரளா ஸ்டைலில் இருக்கும்.

Exit mobile version