கேரளா ஸ்பெஷல் ரெசிபி: ‘சின்ன முள்ளன் மீன் குழம்பு’ – ஊரை கூட்டும் மணத்துடன் செய்வது எப்படி?

0
63
#image_title

கேரளா ஸ்பெஷல் ரெசிபி: ‘சின்ன முள்ளன் மீன் குழம்பு’ – ஊரை கூட்டும் மணத்துடன் செய்வது எப்படி?

மீன் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் நான் வெஜ் வகையாகும். இதில் மத்தி, ஜிலேபி, கெண்டை என பல வகைகள் இருக்கிறது. இதில் அதிகளவு ஒமேகா 3 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைத்து விடும். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல் என பல வெரைட்டி செய்து உண்ணப்பட்டு வருகிறது.

இதில் சின்ன முள்ளன் மீன் சேர்த்து தயாரிக்கப்படும் குழம்பு கேரளாவில் பேமஸான ஒன்று ஆகும். இந்த மீன் குழம்பு முறையாக செய்வது எப்படி என்பது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*சின்ன முள்ளன் மீன் – 1/2 கிலோ

*புளி – எலுமிச்சம் பழ அளவு

*உப்பு – தேவையான அளவு

*தனி மிளகாய்தூள் – 2 தேக்கரண்டி

*மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி

*சின்ன வெங்காயம் – 6

*தேங்காய்துருவல் – 1/2 கப்

*சீரகம் – 1/2 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 6 தேக்கரண்டி

*கடுகு – 1/4 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:-

வாங்கி வந்த முள்ளன் மீனை தண்ணீர் கொண்டு கிளீன் செய்யவும்.

அடுத்து ஒரு பவுலில் எலுமிச்சம் பழ அளவு புளியை போட்டு வெந்நீரில்ஊற்றி சிறிது நேரம் ஊற விடவும். பின்னர் புளி கரைந்து வந்ததும் ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு மண் சட்டி வைத்து அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொள்ளவும். அடுத்து 2 தேக்கரண்டி மிளகாய் தூள், சிறிதளவு உப்பு, 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குறைவான தீயில் கொதிக்க விடவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 கப் தேங்காய் துருவல், 6 சின்ன வெங்காயம், 1/2 தேக்கரண்டி சீரகம்’சுரத்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

இந்த விழுதை கொதிக்கும் புளி கலவையில் சேர்த்து கலந்து விடவும். தொடர்ந்து 2 பச்சை மிளகாய் கிள்ளி போட்டு கொதிக்க வைக்கவும்.

குழம்பில் பச்சை வாசனை நீங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள முள்ளன் மீன் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிண்டி சில நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் 6 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் 1/4 தேக்கரண்டி கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு பொரிய விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இந்த தாளிப்பை தாயார் செய்து வைத்துள்ள முள்ளன் மீன் குழம்பில் சேர்த்து கிளறவும்.
இவ்வாறு செய்தால் சின்ன முள்ளன் மீன் குழம்பு அசத்தல் சுவையில் இருக்கும்.