கேரளா ஸ்பெஷல் ரெசிபி: சுவையான சிம்பிளான ‘ரோஸ் எலாஞ்சி’ – செய்வது எப்படி?

0
70
#image_title

கேரளா ஸ்பெஷல் ரெசிபி: சுவையான சிம்பிளான ‘ரோஸ் எலாஞ்சி’ – செய்வது எப்படி?

நம்மில் பலருக்கு தோசை என்றால் அலாதி பிரியம். இந்த தோசையில் இனிப்பு வைத்து சாப்பிட்டால் அதிக சுவையுடன் இருக்கும். இந்த தோசை மைதா + ரோஸ் எசன்ஸ் சேர்த்து தயாரிக்கப்பட்டு தேங்காய் + சர்க்கரை வைத்து பரிமாறப்படுகிறது. இந்த ரோஸ் எலாஞ்சிகேரளா மக்களின் பேவரைட் ரெசிபி ஆகும்.

தேவையான பொருட்கள்:-

*மைதா மாவு – 1 கப்

*முட்டை – 1

*உப்பு – தேவையான அளவு

*தேங்காய்த் துருவல் – 1/2 கப்

*சர்க்கரை – 1/2 கப்

*ரோஸ் எசன்ஸ் -சிறிதளவு

ரோஸ் எலாஞ்சி செய்யும் முறை…

ஒரு பவுலில் 1 கப் மைதா சேர்த்துக் கொள்ளவும். அடுத்து அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு மைதாவை கலக்கி கொள்ளவும். பிறகு ரோஸ் எஸ்சென்ஸ் 5 சொட்டு விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு தோசை கல் வைத்து அவை சூடேறியதும் தயார் செய்து வைத்துள்ள மாவில் தோசை வாரத்துக் கொள்ளவும். தோசை லேசாக வெந்து வந்ததும் சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரையை தூவி விடவும். பின்னர் இதை ரோலாக மடித்து ஒரு தட்டிற்கு மாற்றவும்.

இவ்வாறு செய்தால் ரோஸ் எலாஞ்சி அதிக மணம் மற்றும் சாப்பிட அதிக சுவையுடன் இருக்கும். இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.