கேரளா ஸ்பெஷல் சிவப்பு கவுனி அரிசி பொங்கல் – சுவையாக செய்வது எப்படி?
சிவப்பு கவுனி அரிசி பொங்கல் சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
தேவையான பொருட்கள்:-
*மத்தா அரிசி(உடைத்து) – 1/2 கப்
*பாசி பருப்பு (உடைத்த்து) -1 தேக்கரண்டி
*வெல்லம் (பொடித்தது) – 1/2 கப்
*பச்சை ஏலக்காய் (பொடியாக பொடித்தது) – 2
*நெய் – `2 தேக்கரண்டி
*முந்திரி பருப்புகள் – 7
*உலர் திராட்சை – 7
சிவப்பு அரிசி கவுனி பொங்கல் செய்முறை….
அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 கப் சிவப்பு கவுனி அரிசி மற்றும் பருப்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
அரிசி மற்றும் பருப்பு நன்கு ஊறி வந்ததும் இதை குக்கரில் சேர்த்து சரியான அளவு தண்ணீர் ஊற்றி 6 விசில் வரும் வரை நடுத்தர தீயில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து 1/2 கப் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லக் கரைசலை கொதிக்க வைக்கவும்.
அடுத்து அதில் வேக வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை சேர்த்து கிளறி விடவும். அரிசி கலவை கெட்டியாகும் வரை குறைவான தீயில் வேக விடவும். பின்னர் அதில் இடித்த ஏலக்காயை சேர்த்துக் கொள்ளவும்.
மற்றொரு அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து அதில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடானதும் முந்திரி, உலர்திராட்சை மற்றும் தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்து வெந்து கொண்டிருக்கும் பொங்கலில் போட்டு கிளறி விடவும். இவ்வாறு செய்தால் சிவப்பு கவுனி அரிசி பொங்கல் சுவையாக இருக்கும்.