கேரளா மாநிலம் மலப்புரம் படகு கவிழ்ந்து விபத்து.10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த முதல்வர்!
கேரள மாநிலம் மலப்புரம் அருகே நேற்று இரவு சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நிவாரணம் அறிவித்துள்ளார்.
நேற்று இரவு கேரளா மாநிலம் மலப்புரம் அருகே சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற படகு தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நீரில் மூழ்கி 22 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நிவாரணம் அறிவித்துள்ளார்.
படகு விபத்து நிகழ்ந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் உயிரிழந்தோர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படகு விபத்து நிகழ்ந்ததை அறிந்த இந்திய ஜனாதிபதி அவர்கள் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.